தமிழக அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து
வருகிறது. பெரும் பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கவே
விரும்புகின்றனர். அரசு பள்ளிகளில், கற்றல் குறைபாடு, உள்கட்டமைப்பு வசதி
குறைவு, ஆங்கில வழி கல்வி மீதான மோகம் என, பல்வேறு காரணங்களால்,
மாணவர்எண்ணிக்கை சரிகிறது.அதனால், பல பள்ளிகளை மூடும் நிலைமை
ஏற்பட்டுள்ளது.
800க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, ஒரு மாணவர் இல்லாத நிலை
உள்ளது. 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, 10க்கும் குறைவான
எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர்.இது போன்ற நிலையால், அரசு தொடக்கப்
பள்ளிகள் எதிர்காலத்தில் இருக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், ஆசிரியர்களின் பணியிடங்களை காப்பாற்றும் வகையிலும்,
நலத் திட்ட உதவிகளுக்கா கவும், பல அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை
போலியாகக் காட்டுவது தெரிய வந்து உள்ளது.இந்நிலையில், அரசு பள்ளிகளின்
தரத்தை உயர்த்தும் வகையிலும், தினமும் மாணவர்கள் வருவதை தெரிந்து கொள்ளும்
வகையிலும், வருகை பதிவுக்கு, 'மொபைல் ஆப்' என்றசெயலியை, ஒருங்கிணைந்த
கல்வித் திட்டஅதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர்.
இது குறித்து, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அலுவலகம்
அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'இந்த மொபைல் ஆப் வாயிலாக, ஒவ்வொரு நாளும்
பாடவேளை வாரியாக, மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். இதை, வட்டார
வள அதிகாரிகள் மற்றும் இயக்குனரக அதிகாரிகள் கண்காணிப்பர்' என, கூறப்பட்டு
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...