பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அல்லது முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக
இருக்கிறோம் என ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியா்
கூட்டணியின் தலைவருமான செ.முத்துசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரது காலத்திலும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் தீா்வு கண்டனா். தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அனுபவம் உள்ளவா் அவருடன் அல்லது முதல்வருடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எங்கே, எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு சார்பில் அறிவித்தால் பேச தயாராக உள்ளோம். எந்த பிரச்னையானாலும், போராட்டமானாலும் பேச்சுவார்த்தையில் தான் முடியும்.
இதற்கிடையே திங்கள்கிழமை நடைபெறும் விசாரணையில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் கல்வித்துறை சார்பில் எங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் தந்தாலும் அதை ஏற்க தயாராக உள்ளோம்.
கைது நடவடிக்கை என்பது போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு எடுத்திருக்கும் யுக்தி என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...