*தொடக்க
பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பதால், வகுப்பிற்கு ஒரு
ஆசிரியர் வீதம் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தமிழகம் முழுவதும்
37 ஆயிரத்து 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை;
31 ஆயிரத்து 293 தொடக்க, நடுநிலை பள்ளிகள் உள்ளன.
*மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வி தரத்தை உயர்த்தவும் தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்க கல்வி துறை திட்டமிட்டுள்ளது.3,133 பள்ளிகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
*இதன் மூலம் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையில் ஒரே பள்ளியில் படிக்க முடியும். வரும் ஜூனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
*ஆசிரியர் ஒருவர் கூறும்போது
*தற்போது கிராமங்களில் பெரும்பாலான தொடக்க பள்ளிகள் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகின்றன.
*இணைப்பின் மூலம் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க பள்ளிகளில் வகுப்பு எடுக்க வாய்ப்பு உள்ளது.கற்றல், கற்பித்தல் திறன் மேம்படும். பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடி வருவார்கள்.
*கிராமப்புறங்களை மையப்படுத்தியே தொடக்க பள்ளிகள் அமைந்துள்ளன. இணைப்பின் மூலம் பள்ளிகளுக்கு இடையேயான துாரம் அதிகரிக்கும்.
*ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே தலைமை ஆசிரியர் கீழ் வருவதால், உயர்கல்வியில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இவற்றையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...