அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், புதிதாக
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 22ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில், ஆசிரியர் சங்கங்களில் சில பிரிவினர் பங்கேற்றுள்ளனர். அதனால், தொடக்கப் பள்ளிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள உத்தரவு: ஆசிரியர்கள் போராட்டத்தால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப் பட்டுள்ளது. பொதுதேர்வு மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வை, உடனே துவங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகளை திறந்து பாடம் நடத்த, தகுதியான ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை அளித்து உள்ளார்.
எனவே, பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர்களை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், உடனடியாக நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியருக்கான, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட்., மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கும், குறைந்தது ஒரு தற்காலிக ஆசிரியரை நியமித்து, பள்ளிகளை இயக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்காலிக நியமனத்தை அதிகரித்து கொள்ளலாம்.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், உடனே பணிக்கு திரும்ப வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வரா விட்டால், அவர்கள் மீது, நாளை முதல், முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஒழுங்கு நடவடிக்கை துவங்கும்.
வரும், 28 முதல், தற்காலிக ஆசிரியர்கள்
உதவியுடன், பள்ளிகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்வித் துறையின் நடவடிக் கைகளுக்கும், பணிக்கு வரும் ஆசிரியர்களுக் கும் யாராவது தொல்லை தந்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்து, அதன் விபரத்தை கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
'நோட்டீஸ்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதால், வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர் களுக்கு,'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு:அரசு பணிகள் பாதிக்கும் வகையில், 'ஸ்டிரைக்' போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது, அரசு பணியாளர் நடத்தை விதிகளின் படி விதிமீறலாகும்.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது; அது சட்ட விரோதம்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது, பள்ளிகளில் திருப்புதல் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கி இருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தால், இந்த பயிற்சிகள் பாதிக்கப் பட்டு உள்ளன. செய்முறைத் தேர்வுகள் நடக்காமல், பாடம் நடத்தப்படாமல், அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அடிப்படை தொடக்க கல்வி மாணவர்கள் நிலை, இன்னும் மோசமாகும்.அதனால், அரசு பள்ளிகளின் நிலை மோசமாகி, எந்த பெற்றோரும், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். இந்த நிலையை தடுக்க, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.வேலைக்கு வராத நாட்கள், அனுமதி பெறாத விடுமுறையாக கணக்கிடப்பட்டு, சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படாது.
அனுமதி பெறாமல், பணிக்கு வராத ஊழியர்களின் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட, எந்த வகை விடுப்பும், போராட்ட காலத்தில் வழங்கப்படாது. மருத்துவ விடுப்பு கேட்டு, போலியான தகவல்களை அளிப்பது, மருத்துவ விடுப்பு ஆய்வுக் குழுவுக்கு தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தி, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். அதை மீறி, போராட்டத்தில் பங்கேற் றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை புறக்கணிக்காதீங்க'
குடியரசு தினம், நாளை நாடு முழுவதும்
கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
குடியரசு தினத்தை, நாளை அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிமரத்தை புனரமைத்து, சரிபார்க்க வேண்டும்.
நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பள்ளிகளில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க வேண்டும். இதற்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை பராமரிக்க வேண்டும். அன்றைய தினம், நாட்டுப் பற்று, பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, மாணவர்கள் வாயிலாக நடத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தலைமை ஆசிரியர் களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் அனுப்பி, ஆசிரியர்களை குடியரசு தினம் கொண்டாட வரும்படி, அழைப்பு விடுத்துள்ளனர்.
டிஸ்மிஸ்
பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட எச்சரிக்கையில், 'பள்ளி கல்வித் துறையில், தற்காலிகமாக பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் பங்கேற்பது தெரிய வந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.
'வேலை நிறுத்தம் வாபசாகுமா?'
'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ஒருங்கிணைப்பாளர், தாஸ் அளித்த பேட்டி: எங்களின் போராட்டத்துக்கு, உயர் நீதிமன்றம், எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, எங்கள் போராட்டம் தொடரும்.
மாவட்ட தலைநகரங்களில், இன்று மறியல் நடத்தப்படும். நாளை, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில் நடக்கும். 28ம் தேதி முதல், போராட்டம் மறுவடிவம் பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'போராட்டத்தை வாபஸ் பெறுவீர்களா' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ''வரும், 28ம் தேதி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ஜாக்டோ - ஜியோ தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, உரிய முடிவு எடுப்போம்,'' என, தாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக, சென்னை, தலைமைச் செயலக ஊழியர்கள்,நேற்று மதியம், உணவு இடைவேளையின் போது, தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் தலைமையில், கோட்டை வளாகத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

How do apply for this temporary teacher post
ReplyDelete