தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு
(ஆவின்) நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட கிளையில் காலியாக உள்ள
தொழில்நுட்பவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: தொழில் நுட்பவியலாளர் (Technician (Lab)) - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள், 2 ஆண்டு லேப் டெக்னீசியன் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629003.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2019
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...