'குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட,
29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டி தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில், 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.அவற்றில் சில தேர்வுகள்: துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான, குரூப் - 1 தேர்வு, சமூக நலத்துறை பள்ளிகளுக்கான, உதவி கண்காணிப்பாளர் தேர்வு. இளநிலை ரசாயன வியல், உதவி ரசாயனவியலாளர் பதவிக்கான தேர்வு என, நான்கு தேர்வுகள், இந்த மாதம் அறிவிக்கப்படும் மீன்வள துறை ஆய்வக உதவியாளர், வேலைவாய்ப்பு துறையில், சுருக்கெழுத்து உதவி பயிற்சி அதிகாரி, நெடுஞ்சாலை துறை இளநிலை வரைவு அதிகாரி, இன்ஜினியரிங் பணி போன்றவற்றுக்கு, பிப்ரவரியில் தேர்வு அறிவிக்கப்படுகிறது அண்ணா நுாலக உதவி நுாலகர், அரசு சட்ட கல்லுாரி நுாலகர், மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்தாய்வாளர், இளநிலை ஆய்வு அலுவலர் பதவிகளுக்கு, மார்ச்சில் தேர்வு அறிவிக்கப்படும் தலைமை செயலக பணியில், மொழி பெயர்ப்பாளர், இன்ஜினியரிங் பணி. அருங்காட்சியக காப்பாட்சியர், உதவி சுற்றுலா அதிகாரி போன்ற பதவிகளுக்கான தேர்வுகள்,ஏப்ரலிலும் நடக்கும். குரூப் - 2, தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள், மே மாதமும் அறிவிக்கப்படுகின்றன கிராம நிர்வாக அலுவல ரான, வி.ஏ.ஓ., உதவி புவியியலாளர், கெமிக்கல் இன்ஜினியர் பதவி களுக்கு, ஜூன் நடக்கும். தமிழக தொழில்துறையில் கண்காணிப்பாளர் பதவிக்கு, ஜூலை; தமிழக சட்ட கல்வி துறையில், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது தமிழக கருவூல துறையில் கணக்கு அதிகாரி பதவிக்கு, நவம்பர்; வன துறை உதவி வன காப்பாளர் பதவிக்கு, டிசம்பரிலும் தேர்வுகள்அறிவிக்கப்பட உள்ளன.தேர்வு இணைப்பு இல்லைடி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு, குரூப் - 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்.இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில், நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்.Revision Exam 2025
Latest Updates
Home »
» இந்தாண்டு 29 வகை தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., பட்டியல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...