Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2018-ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய ஆப்கள் எவை தெரியுமா?




உலகம் முழுவதும் கடந்த 2018-ம் வருடம் என்னென்ன ஆப்கள் அதிகமாகப் பதிவிறக்கப்பட்டன, எவற்றுக்கு அதிக ஆக்டிவ் பயனாளர்கள் இருந்தனர் ஆகிய தகவல்களை கொண்ட வருடாந்திர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது `App Annie' என்னும் ஆப் அனலிடிக்ஸ் நிறுவனம். இதில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தனித்தனி பட்டியல் வெளியிட்டுள்ளது.



இதில் இந்தியாவில் எந்த ஆப்கள் எல்லாம் 2018-ல் நல்ல வரவேற்பைப் பெற்றன எனப் பார்ப்போம். இந்தப் பட்டியல் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டையும் சேர்த்தே வெளியிடப்பட்டுள்ளன. அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்களில் ஃபேஸ்புக் முதலிடம் பிடிக்க அதிக ஆக்டிவ் பயனாளர்கள் கொண்ட ஆப்களில் வாட்ஸ் அப் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதலில் அதிகம் பதிவிறக்கப்பட்ட 10 ஆப்களின் முழுப் பட்டியலைக் காண்போம்.

1. ஃபேஸ்புக்
2. ஃபேஸ்புக் மெசஞ்சர்
3. UC பிரவுசர்
4. வாட்ஸ் அப்
5. ஷேர் இட்
6. டிக் டாக்
7. வீகொ வீடியோ
8. ஹாட்ஸ்டார்
9. ட்ருகாலர்
10. MX பிளேயர்



 மேலும் அதிக ஆக்டிவ் பயனாளர்கள் கொண்ட ஆப்கள் ( Monthly Active Users ) என்ன தெரியுமா?\

1. வாட்ஸ்அப்
2. ஃபேஸ்புக்
3. ஷேர் இட்
4. ஃபேஸ்புக் மெசஞ்சர்
5. ட்ருகாலர்
6. MX பிளேயர்
7. UC பிரவுசர்
8. இன்ஸ்டாகிராம்
9. அமேசான்
10. பேடிஎம்



மேலும் அதிக ஆக்டிவ் பயனாளர்கள் கொண்ட கேம்கள் Ludo king, Candy Crush, PUBG எனவும் பயனாளர்கள் அதிகம் பணம் செலவழிக்கும் ஆப்கள் நெட்ஃப்ளிக்ஸ், டிண்டேர், கூகுள் டிரைவ் எனவும் தெரிவித்திருக்கிறது இந்த அறிக்கை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive