2019 கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களில்
10% இடஒதுக்கீடு
அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவு
மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று
தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 11ம்
தேதி தொடங்கி, கடந்த 8ம் தேதியுடன் மக்களவை முடிந்தது.
அன்றைய தினம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலை
வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்த
மசோதா தாக்கல் செய்யப்பட்டு, 323 உறுப்பினர்கள் ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றி விட்டாலும், மாநிலங்களவையில்
நிறைவேறாமல் செய்வோம் என்று காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் போர்க்கொடி
உயர்த்தின. பின்னர் நீண்ட விவாதத்திற்குப்பிறகு, இறுதியில் மசோதா மீது
வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 165 ஓட்டுகளும், எதிராக 7 ஓட்டுகளும்
பதிவாகின. இதன் மூலம், மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதை தொடர்ந்து.ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் அனைத்து பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...