'பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில்,
பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தமிழகத்தில், 2018 மார்ச்சில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வு அமலுக்கு வந்தது. இந்த தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் என்பது, 100 ஆக குறைக்கப்பட்டது.மேலும், பாடவாரியாக, 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படுகிறது. தொழிற்கல்வியில், செய்முறை இருக்கும் பாடங்களுக்கு மட்டும், தலா, 25 மதிப்பெண், அகமதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், 2017 - 18ம் கல்வியாண்டில் படித்த, பிளஸ் 1 மாணவர்களில், 20 சதவீதம் பேருக்கு, அகமதிப்பீட்டு மதிப்பெண், ஒன்று கூட வழங்காமல், பூஜ்யமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறைந்ததும், தேர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது.பள்ளி வருகை பதிவு, 75 சதவீதம் இருந்தால், அந்த மாணவருக்கு, ஒரு மதிப்பெண்ணை, அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கலாம் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஒரு மதிப்பெண்ணையும், பல மாணவர்கள் பெறவில்லை. அப்படியென்றால், 20 சதவீத மாணவர்கள், 75 சதவீத நாட்கள் பள்ளிக்கு வராமல், தேர்வை எழுதினார்களா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்வாயிலாக, தலைமைஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம், நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.அதில், பல மாணவர்களுக்கு, பிளஸ் 1 தேர்வில், அக மதிப்பெண் பூஜ்யம் என, நிர்ணயித்தது ஏன்; 75 சதவீதம் வருகை பதிவு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா; பூஜ்யம் வழங்கிய ஆசிரியர்கள் யார் என்ற விபரத்தை தாக்கல் செய்யும்படிகூறப்பட்டுள்ளதுRevision Exam 2025
Latest Updates
Home »
» பிளஸ் 1 அகமதிப்பீட்டில், 'பூஜ்யம்' ஆசிரியர்கள் விளக்கம் தர, 'நோட்டீஸ்'
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...