ஆர்.பி.எப்.,
எனப்படும், ரயில்வே பாதுகாப்பு படையில், எஸ்.ஐ., - காவலர் பதவிகளுக்கு,
'ஆன்லைனில்' தேர்வு எழுத வருவோர், மருதாணி, மெஹந்தி வைக்க தடை
விதிக்கப்பட்டுள்ளது.ரயில்வே பாதுகாப்பு படையில், எஸ்.ஐ., மற்றும் காவலர்
பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, வரும், 19, 20ம் தேதிகளில், ஆன்லைன் வாயிலாக
தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும், 73 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கு வருவோருக்கு, ரயில்வே பாதுகாப்பு படை பணியாளர் தேர்வு வாரியம், பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதன் விபரம்:
தேர்வு எழுத வருவோர், அரசு அங்கீகரித்துள்ள ஏதாவது ஒரு, போட்டோவுடன் கூடிய, அசல் அடையாள அட்டை எடுத்து வர வேண்டும். அடையாள அட்டை இல்லாமல், 'ஹால் டிக்கெட்' வைத்திருந்தாலும், தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது
தேர்வு மையத்திற்குள், மொபைல்போன், பேஜர், வாட்ச், ப்ளூடூத், கால்குலேட்டர், உலோகத்தால் ஆன, அணிகலன்கள், வளையல்கள், பெல்ட் மற்றும் பிரேஸ்லெட்டிற்கு அனுமதியில்லை.
தடை செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருளை, தேர்வு மையத்திற்குள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வெளியேற்றப்படுவர்
தேர்வு எழுத வருவோர், பொருட்கள் பாதுகாப்பாக வைக்க, எந்வொரு வசதியும் செய்யப்படாது
'பயோ மெட்ரிக்' முறையில், வருகை பதிவுமுறை உள்ளதால், தேர்வு எழுத வருவோர், இடது கை பெரு விரலில் மெஹந்தி, மருதாணி போட்டு வரக்கூடாது.
ரயில்வே பாதுகாப்பு படை இணையதளத்தில், இடம் பெற்றுள்ள பயிற்சி தேர்வை, அனைத்து தேர்வர்களும் கவனித்து, செயல்முறை பயிற்சி மேற்கொண்டால், தேர்வை விரைவாக எழுத உதவியாக இருக்கும்.
தேர்வு மையத்தில் முறைகேடு, தவறான நடத்தை மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து, ஆர்.பி.எப்., தேர்வுகளிலும், கலந்து கொள்ள முடியாதபடி, தடை செய்யப்படுவர்.
ரயில்வேயில் பணி நியமனம் பெற முடியாத வகையில், தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
இவ்வாறு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...