ஒரு ஊழியர் நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக #உதவியாளராக 18.6.2008 ஆம் தேதி பணியில் நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு பல இடங்களுக்கு பணிமாறுதல் 5.8.2013 ஆம் தேதி ஒரு பணி விலகல்
கடிதத்தை மாவட்ட நீதிபதியிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை மாவட்ட நீதிபதி
12.8.2013 ஆம் தேதி ஏற்றுக் கொண்டார். பின்னர் பரமேஸ்வரி தான் கொடுத்த பணி
விலகல் கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்து விட்டதாகவும், அந்த
கடிதத்தில் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் 1.10.2013 ஆம் தேதி ஒரு மனுவை
அதே மாவட்ட நீதிபதியிடம் அளித்தார். ஆனால் மாவட்ட நீதிபதி அதை ஏற்றுக்
கொள்ள மறுத்து பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறிவிட்டார்.
பணி விலகல் கடிதம் கொடுத்தால் தமிழ்நாடு சார் நிலைப்
பணியாளர்கள் பணி விதிகளின் விதி 41(A) ன்படி 90 நாட்கள் வரை மாவட்ட நீதிபதி
காத்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு காத்திருக்காமல் தனது பணி விலகல்
கடிதத்தை அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறானது என்றும் தனக்கு
சட்டம் வழங்கியுள்ள 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவில்லை அதனால் தனது
உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கோரியும் தனக்கு மீண்டும் வேலை வழங்க
உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு
தாக்கல் செய்தார்.
மேற்படி ஊழியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிச்சுமையால் தான் பணி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், இருந்தபோதிலும் பணி விலகல் கடிதம் கொடுத்து 90 நாட்கள் முடிவடைவதற்குள் அவருடைய பணி விலகல் கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை மாவட்ட நீதிபதியிடம் பரமேஸ்வரி தாக்கல் செய்திருந்ததாகவும் ஆனால் அந்த மனுவை பரிசீலிப்பதற்கு முன்பாகவே மாவட்ட நீதிபதி மேற்படி ஊழியரின் பணி விலகல் ஏற்கப்பட்டு விட்டதாக கூறியது தவறு என்றும் மேற்படி ஊழியர் பணியிலிருந்து விலக மனதார நினைக்கவில்லை என்றும் தமிழ்நாடு சார் நிலைப் பணியாளர்கள் விதிகளில் கண்ட விதி 41(A) ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ள நிலையில் மேற்படி ஊழியரின் பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதி அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறு என்று வாதிட்டார்.

மாவட்ட நீதிபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு பணி விலகல்
கடிதம் கொடுக்கப்பட்டு அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அந்த பணி
விலகல் கடிதத்தை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே விதி 41(A)(b) ன்படி
வாய்ப்பில்லை என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்....
தமிழ்நாடு சார் நிலை பணியாளர்கள் விதிகளின் விதி 41(A) மூன்று காரணிகளை உள்ளடக்கியது.
1. 3 மாதங்களுக்கு குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை அரசு ஊழியர் கொடுக்க வேண்டும்.
2. அதனை வேலை அளித்த அதிகாரமுடைய நபர் ஏற்க வேண்டும்.
3. அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்பப் பெறுதல் குறித்து விதி 41(A)(a) ல் கூறப்பட்டுள்ளது.
பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது குறித்து தகுதி பெற்ற
அதிகாரி குறிப்பிட்ட கால அவகாசம் அளித்து, அந்தப் பணி விலகல் கடிதத்தை
ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களை குறிப்பிட்டு ஓர்
உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.
அதிகாரம் பெற்ற நபர் பணி விலகல் கடிதத்தை குறித்து எந்தவொரு
உத்தரவையும் அறிவிப்பு காலத்திற்குள் பிறப்பிக்கவில்லை என்றால் விதி
41(A)(c) ன்படி அந்தக் கடிதம் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். இந்த வகையில்
அந்த விதியிலுள்ள கூறுகள் அரசு ஊழியருக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணி
விலகல் கு அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்கு பின்னர் அந்தப் பணி விலகல்
அறிவிப்பின் மீது ஓர் உத்தரவை பிறப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும், அது
தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை
பாதிக்காது.
உச்சநீதிமன்றம் " பஞ்சாப் நேஷனல் வங்கி Vs P. K. மெட்டல்
(1989-SUPP-2-SCC-175)" என்ற வழக்கில், பணி விலகல் கடிதம் 3 மாதங்களுக்கு
பின்னரே நடைமுறைக்கு வரும். அதற்கு முன்பாக ஊழியரை பணியிலிருந்து
விலகும்படி அதிகாரி வற்புறுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
பணி விலகல் அறிவிப்பு கொடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் அதனை
திரும்பப் பெற அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை விதி
41(A)(b) எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறி மேற்படி ஊழியருக்கு
மீண்டும் வேலையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...