ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி அசத்திய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்: இரா.வனஜா
அன்னவாசல்,டிச.7:
இலுப்பூர்கல்வி மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி அரசினர்
மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு நடைபெற்றது..
ஆண்டாய்வின்
போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா திடீரென 6 ஆம்
வகுப்புக்குள் சென்று அறிவியல் பாடத்தில் காற்று என்கிற தலைப்பில் பாடம்
நடத்தினார்..பாடம் நடத்தும் பொழுது இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்டு
உற்சாகப்படுத்தினார்..மாணவர்களு ம் ஆர்வமாக பதில் அளித்தனர்..
ஆண்டாய்வின்
போது முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் இருவர்,மாவட்ட கல்வி அலுவலக
பணியாளர் ஒருவர் என மூவர் அலுவலக பதிவேடுகள் சரியாக உள்ளதா என
சரிபார்ப்பார்ப்பார்கள் அதனை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்வார்
.அத்துடன் மாவட்ட கல்வி அலுவலர்,பள்ளி துணைஆய்வாளர்,தலைமையாசிரியர்கள் ,ஆசிரிய
பயிற்றுநர்கள் அடங்கிய குழுவினர்கள் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை
மேற்பார்வை செய்வதையும் ஆய்வு செய்வதோடு, தலைமைஆசிரியர்கள் மற்றும்
முதுகலை ஆசிரியர்கள் 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம்
கற்பிப்பதையும் ஆய்வு செய்வார்.ஆனால் இன்று யாரும் எதிர்பாராத வகையில்
திடீரென ஆறாம் வகுப்பிற்குள் சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாடம்
எடுத்தது கண்டு அப்பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் வியப்பில்
ஆழ்ந்தனர்..
பின்னர்
முதன்மைக் கல்வி அலுவலர் பாடம் நடத்தும் முறை குறித்தும் அரசுத் தேர்வு
எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிக்கவும் தலைமையாசிரியர்
மற்றும் ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை
நட்டுச் சென்றார்..
ஆய்வின்
போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,பள்ளி துணைஆய்வாளர்
கி.வேலுச்சாமி,மருதாந்தலை பள்ளி தலைமையாசிரியர் பாரதி
விவேகானந்தன்,அன்னவாசல் பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன்,மாங்குடி
தலைமையாசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேடம் எங்கள் மாவட்டம் வந்தால் நல்லது
ReplyDelete