உடுமலை அருகே, அங்கன்வாடி சுவர்களில்
குட்டீஸ்களை ஈர்க்கும் வகையில், கார்ட்டூன் கதாபாத்திரங்களின் ஓவியம்
வரையப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
வேலாயுதக்கவுண்டபுதுாரில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின்
கீழ், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இக்கிராமத்தைச்சேர்ந்த,
பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு வந்து செல்கின்றனர். இம்மையத்துக்கு
சொந்தக்கட்டடம் இல்லாததால், ஊராட்சி கட்டடத்தில் செயல்பட்டு
வருகிறது.போதிய இடவசதியில்லாத கட்டடத்தால், குழந்தைகளுக்கு மிகவும் சிரமம்
ஏற்பட்டது.இந்நிலையில், நடப்பாண்டில் தேசிய ஊரக
வேலைஉறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஏழு
லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு
விழாவுக்கு, தயார்நிலையில் உள்ளது.கவரும் ஓவியங்கள்புதிய அங்கன்வாடி
கட்டடத்தின் சுவர்களில், குட்டீஸ்களை கவரும் வகையில் கார்ட்டூன்
கதாபாத்திரங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கண்கவர் வண்ணங்களில்
வரையப்பட்ட ஓவியங்கள், இம்மையத்தை வண்ண காட்சியகமாக பிரதிபலிக்கிறது.
சுவரோவியங்கள் பலரையும் கவர்ந்திழுப்பது போல் அமைந்துள்ளது.கார்ட்டூன்
கதாபாத்திரங்களை வரைந்துள்ளதால், குட்டீஸ்களும் ஆர்வத்துடன் அங்கன்வாடி
மையத்துக்கு வரும் வாய்ப்புள்ளதாக, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள்
தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வசதிகள் மாற்றுத்தினாளிகளுக்கான படிக்கட்டு அமைப்பு, குழந்தைகள்
கழிப்பிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை, உள்ளிட்ட புதிய வசதிகளும்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உட்பகுதி சுவர்களில் அங்கன்வாடி
குழந்தைகளுக்கான பாடத்திட்டங்கள் குறித்து ஓவியங்கள்
வரையப்பட்டுள்ளன.அங்கன்வாடி மைய கட்டடத்தின் சுவர்கள் அனைத்தும்
ஓவியங்களால் ஒளிர்வதால், மாணவர்கள் உற்சாகத்துடன் அங்கன்வாடிக்கு
வருவார்கள் என தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...