இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள வான் அறிவியல் ஆய்வகம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவுப் பசியை தூண்டும் வகையில், சேலம் மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வான் அறிவியல் தொழில்நுட்பக் காட்சிக்கூடத்தை பயிற்சி மையத்துடன் அமைத்துள்ள இஸ்ரோ.
இந்த ஆய்வகம் கிராமப்புற மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.
ஆய்வகத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை சாதனைகளை பற்றி விளக்கும் விதமாக மற்றும் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளின் மாதிரிகள், விமானப்படை விமானங்களின் மாதிரிகள், நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைப் பார்வையிடும் மாணவர்கள் வான் அறிவியலை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இஸ்ரோவில் மட்டுமே கிடைக்கூடிய 43 வகையிலான தலைப்புகளில் புத்தங்களும் ஆய்வு கூடத்தில் உள்ளன.
புத்தகத்திற்கு வெளியே உள்ள உலக அறிவியலை அறிந்து கொள்ள இதுபோன்ற ஆய்வகங்கள் உதவும் என்கிறார் மத்திய தொழில்நுட்பத்துறை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்.
இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்ட இந்த ஆய்வகம் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்க முடியும் என்கிறார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.
சேலம் மாநகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுப்பாளையம் கிராமம் அடுத்த சில ஆண்டுகளில் விஞ்ஞானிகளை உருவாக்கும் மையமாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...