*பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது
*தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது
*அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது
*ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன
*அதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது
*அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என, உத்தரவிடப்பட்டுஉள்ளது
*நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை, இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக் கூடாது
*மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது' என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது
*வரும், 1ம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...