சீனாவில்
நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப்
போட்டியில், முதலிடம் பெற்ற திருவாரூர்
ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு வெள்ளிக்கிழமை
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சீனாவில்
டிச.1 முதல் 3 வரை நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய
அளவில் தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி
கே. தர்ஷினி பங்கேற்று, உலக அளவில் முதலிடம் பெற்று, சான்றிதழ் மற்றும்
தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அவரை பள்ளியின் தாளாளர் மு. வடுகநாதன்,
தலைமையாசிரியை பெ. வசந்தா மற்றும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்கள்
பாராட்டினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...