தமிழகத்தில் முக்கிய கோயில்களில் மாணவ, மாணவியருக்கு
திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக, 50
ஆயிரம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை
அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள
கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் திருப்பாவை மற்றும்
திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதன்படி
வைணவ கோயில்களில் திருப்பாவையும், சைவ கோயில்களில் திருவெம்பாவை போட்டியும்
நடத்தப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 1ம் தேதி முதல் இசை
வல்லுநர்கள் மூலம் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை சிறப்பு வகுப்புகள்
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு பகுதிகளில் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 47 முதுநிலை கோயில்களில் பள்ளி
மாணவ, மாணவியருக்காக திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டிகள்
மற்றும் கட்டுரை எழுதுதல் போட்டிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்பரிசாக ரூ.3 ஆயிரமும்,
இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும்
வழங்கப்படுகிறது.
இதை தொடர்நது மாவட்ட அளவிலான போட்டிகள் போட்டிகளிலும்
நடக்கிறது. இந்த போட்டிகளில் கோயில்களில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்கள்
மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த போட்டிகளில் பங்கேற்கும் மாணவ,
மாணவிகளுக்காக 50 ஆயிரம் திருப்பாவை, திருவெம்பாவை புத்தகங்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும், கூறும் போது, ‘அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் மார்கழி மாதம் 1ம் தேதி முதல்
திருப்பாவை, திருவெம்பாவை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த
வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்காக 50 ஆயிரம் புத்தகங்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவியருக்கு
ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும்
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. வரும் ஜனவரி 15ம் தேதிக்குள்
இந்த போட்டிகளை நடத்தி முடிக்கவும் கோயில் நிர்வாகங்களுக்கு அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...