தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் முற்றிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முற்றிலும் பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தின் (எமிஸ்) மூலமாக மட்டுமே நடைபெறும். கலந்தாய்வுக்குப் பிறகு நிர்வாகக்ôரணங்கள் உள்பட வேறு எந்தக் காரணங்களுக்காகவும் மாறுதல் கோருவது தவிர்க்கப்பட வேண்டும்.
வரும் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் பணியிட மாறுதல்
பெற்ற ஆசிரியர் பட்டியலை மாவட்டக் கல்வி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?: தமிழகத்தில் நிகழாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜுன் மாதம் நடைபெற்றது. அப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆன்லைனில் காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர்.
பின்னணி என்ன?: தமிழகத்தில் நிகழாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜுன் மாதம் நடைபெற்றது. அப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆன்லைனில் காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து ஒரு மாவட்டத்தில் அதிக நாள்கள் பணியாற்றுபவர்கள்தான்
இடமாறுதலுக்கு முன்னுரிமை பெற்றவர்கள். 10 ஆண்டுகளாகப் பிற மாவட்டங்களில்
பணியாற்றி, சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் கிடைக்காமல் ஏராளமான
ஆசிரியர்கள் தவிக்கிறார்கள். ஆனால் சில மாதங்கள் வெளியூர்களில் வேலை
பார்த்துவிட்டு, லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டத்துக்கு மாறுதல் பெற்று பலர்
வந்துள்ளனர்.
இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்த பலனும் இல்லை. எனவே இந்த ஆண்டு நடந்த ஆசிரியர்களின் பொது இடமாறுதல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
ஆசிரியர் பொது இடமாறுதலில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல் குறித்து லஞ்ச
ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை
கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஜன.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, பொது மாறுதல் கலந்தாய்வில் எத்தனை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...