அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது!
தமிழக பள்ளிகளில் நடைபெற்று வரும் அரையாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி
நிறைவடையும் நிலையில், வரும் 23 முதல் 31-ஆம் தேதி வரை உள்ள விடுமுறை
நாட்களில் NEET சிறப்பு வகுப்புகளை நடத்த தமிழக பள்ளிக்கல்விதுறை
திட்டமிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திலுள்ள 413 மையங்களிலும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளை கருத்தில்கொண்டு செய்முறை வகுப்புகள் மற்றும் மீதம் இருக்கக்கூடிய பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுந்த கால அட்டவணையை தயார் செய்து, திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் எனவும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்து கடிதத்தில் கையெழுத்து பெற்று வரவேண்டும் எனவும் பள்ளிக்கல்வி துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகளின் போது அரையாண்டு தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

So sad😢
ReplyDeleteSo sad😢
ReplyDeleteSo sad😁😭
ReplyDeleteVery good.. My Baby School not done our student portion So Now Will Get Studied in the Holidays
ReplyDelete