தற்போது அதை டிஜிட்டல் ஆக்கும் முயற்சியாக TNSchools மொபைல் செயலி மூலமாக
பதிய வேண்டும் என்று கொண்டு வந்ததன் மூலம் வகுப்பு ஆசிரியர்கள் படும்
கஷ்டங்கள் கல்வித்துறை அதிகாரிகள் அறிவார்களா என்று தெரியவில்லை!
#ஆசிரியர் தன் மொபைலில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்த பிறகும் பல சமயங்களில் விடுப்பு மாணவர்கள் செயலியில் அப்டேட் ஆவதில்லை.
#ஒரு ஆசிரியர் அவர் மொபைலில் வருகையைப் பதிவு செய்த பின் வேறொரு ஆசிரியரின்
மொபைலில் அதே வகுப்பை பார்த்தால் வருகை பதிவு செய்யப்பட்டதாக
காண்பிக்கவில்லை. மீண்டும் அந்த மொபைலில் வருகை பதிவு செய்தால் தான் அவர்
மொபைலில் தெரிகிறது.
#இப்படி ஒரு நிலையில் கல்வி உயரதிகாரிகள் அவர்கள் மொபைலில் ஒரு குறிப்பிட்ட
பள்ளியில் மொபைல் செயலியை உபயோகித்து வருகை பதிவு செய்திருக்கிறார்களா
என்று கண்டறிய முற்பட்டால் அந்த பள்ளியில் மொபைல் செயலியை
உபயோகப்படுத்தவில்லை என்பது போல தான் காண்பிக்கும்!
#பதிவு செய்த பிறகு Alert என்ற தலைப்பில் School login mismatch என்று ஒரு
தகவல் வருகிறது. அதை க்ளிக் செய்து விட்டால் நாம் பதிவு செய்த வருகை மாயமாக
மறைந்து விடுகிறது!
#மொபைல் செயலியில் 9:30 மணிக்குள் வருகையைப் பதிய வேண்டும். அப்படி தவறும்
பட்சத்தில் அந்த மாணவர்கள் தாமத வருகை என்றாகி விடும். 9:30 மணிக்குள் என்ற
கால அளவு இறை வணக்கத்திற்குரிய காலம். அந்த நேரத்தில் அனைத்து மாணவர்களும்
ஆசிரியர்களும் இறை வணக்கக் கூடத்தில் இருப்பார்கள்.
#மதியமும் இந்த வருகைப்பதிவை மொபைல் செயலியில் பதிய வேண்டும்.
#மொபைல் செயலியில் பதிந்த பிறகும் Daily Report என்ற பகுதியில் வருகையைச்
சரிபார்க்கும் போது ஆசிரியர்கள் பதிந்த வருகை பல வகுப்புகளுக்கு entry
ஆகவில்லை.
#ஒரே நேரத்தில் சர்வரை பல ஆசிரியர்கள் உபயோகப்படுத்துவதால் இணையத் தொடர்பு சரிவர கிடைப்பதில்லை.
#ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய பாடப்பகுதிகள் அதிகம் உள்ள
நிலையில் இந்த மொபைல் செயலி மூலம் வருகைப் பதிவு மேற்கொள்வது அவர்களின்
நேரத்தை வீணடிக்கிறது.
#புதிய புதிய கற்றல் முறைகள், எண்ணற்ற பதிவேடுகள், கணினி மயமாக்கல் இவைகள்
அனைத்தும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நினைத்து கல்வித்துறை
கொண்டு வந்துள்ளது.
#ஆனால் நடைமுறையில் இவை அனைத்தும் கல்வி கற்றுத்தருவதற்கான நேரத்தை வீணடிக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை!
#தற்கால கல்வி முறையில் பயிலும் மாணவர்களை விட அந்த கால குருகுல முறையிலும்
1960-2000 வரையிலுமான காலக்கட்டத்தில் பயின்ற மாணவர்களின் அறிவுத்திறன்
மேலோங்கி இருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
#கல்வித்துறையில் மாற்றம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
#ஆனால் அவை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
#ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும்.
#இவற்றை மனதில் வைத்து #மேதகு_கல்வி_அதிகாரிகளும் #மாண்புமிகு
#கல்வியமைச்சரும் ஆசிரியர்களின் துயர் களைய முன்வருவார்களா?
இப்படிக்கு
ஆசிரியை சீதாலட்சுமி.
True
ReplyDelete