ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் நடத்தப்பட்ட அரசு சட்டக்
கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான விடைக்
குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றின் மீதான ஆட்சேபனைகளை தேர்வர்கள் வரும் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஆர்.பி. சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பு-
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான தற்காலிக தேர்வுக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் வரும்10- ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனி படிவத்தில் உரிய ஆதாரங்களுடன் அனுப்பவேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...