டிஎன்பிஎஸ்சி
சார்பில் அடுத்த மாதம் நடத்துவதாக இருந்த நூலகர் தேர்வுக்கான தேதியில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வாணையத்தின் செயலாளர்
நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த மாதம், 11ம் தேதி நடத்தப்பட்ட
தொகுதி 2க்கான முதனிலைத் தேர்வின் முடிவுகள், கடந்த 17ம் தேதி
வெளியிடப்பட்டது
மேலும் அதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 23.02.2019 அன்று நடத்தப்படவுள்ளது
இந்நிலையில்,
தொகுதி 2க்கான முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறவிருக்கும் அதே நாளில்
(23.02.2019) ஏற்கனவே நடைபெறுவதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்த
பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத்
தேர்வினையும், அதே போல் 24.02.2019 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த
தொல்பொருளியல் துறையில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான
எழுத்துத் தேர்வினை மாற்றுத்தேதியில் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது
அதன்படி
நூலகர் (பல்வேறு துறைகளில்) தேர்வு, 23.2.2019 அன்று நடத்துவதாக
அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 30.03.2019க்கு மாற்றப்பட்டுள்ளது
அதேபோல்,
நூலகர் (தொல்பொருளியல் துறை) தேர்வு, 24.02.2019 அன்று நடத்தப்படுவதாக
அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 31.03.2019ம் தேதிக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளது
மேலும் இத்தேர்வுகள் ஏற்கனவே
அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய 4
மாவட்டங்களில் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...