கள்ளா் சீரமைப்பு - தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் - மாவட்ட செயற்குழு கூட்டம், உசிலம்பட்டி:
12/12/18 அன்று உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் கள்ளர் சீரமைப்பு - தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (KR TNPGTA)
சங்க மாவட்ட செயற்குழு
மாவட்ட தலைவர் P.அன்பழகன் தலைமையிலும்
மாநில துணைத் தலைவர்
P. இராபர்ட் குமார் முன்னிலையில்
நடந்தது.
மாவட்ட செயலாளர் P. முத்துக்குமார் மற்றும்
மாவட்ட பொருளாளர்
R.சரவணக்குமார் அவர்களால் கொண்டு வரப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங்கள்
பின்வருமாறு
1)2017- 2018 கல்வியாண்டில்
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 100% தேர்ச்சி வழங்கிய பாட ஆசிரியருக்கும் / 100%தேர்ச்சிக்காக
உழைத்த தலைமையாசிரியருக்கும் ஊக்கத்தொகையானதுநிதி ஒதுக்கீடு செய்து இருந்தும் அதனை இதுவரை வழங்காமல் உள்ளது. உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஊக்கத்தொகை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் 2016-2017 யில் 100% தேர்ச்சி வழங்கிய ஒரு சில ஆசிரியருக்கு ஊக்க தொகை இதுவரை வழங்கபடாமல் உள்ளது. அவர்களுக்கு வெகுவிரைவாக வழங்கிட நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது
2) 2015- 2016 யில் ஜூன் மாதம் பணியேற்ற PG ஆசிரியர்களுக்கு தகுதி காண் பருவம் முடித்ததற்கான ஆணை வழங்கபடாமல் இருப்பதை உடன் நடவடிக்கை மேற்கொண்டு வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்
3. பள்ளி கல்வி துறையில் M.Phil படித்தமைக்கான பின் ஏற்பு ஆணை வழங்கியது போல் கள்ளர் சீரமைப்பில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு M.Phil படித்து முடித்தமைக்கு
பின்ஏற்பு ஆணை வழங்கிட உரிய வழிவகை செய்திட கேட்டு கொள்கிறோம்
4. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 7 PG பணியிடங்களில் கலை பிரிவுக்கென 2 பாடங்கள் ஒதுக்கிடவும் மேலும் தரம் உயர்த்தபட்ட பள்ளிகளில் 9 PG ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டு கொள்கிறோம்
5 )பள்ளி கல்வி துறையில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் - மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குவது போல் கள்ளர் பள்ளி மாவட்டக்கிளை மாவட்ட
பொறுப்பாளர் களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்
6) ஆசிரியர்கள்
வாங்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கு அனுமதி வாங்குவதற்கான
நடைமுறைகள் எளிமையான நடைமுறைகளாக இருக்கும் வண்ணம்
நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம்.
தீர்மானங்கள்
குறித்து நிறைவேற்றிட கோரி
இணை இயக்குநர் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி எங்களது அமைப்பை அழைத்து பேசி தீர்வு காண நாள் மற்றும் நேரம் ஒதுக்கிட கள்ளா் சீரமைப்பு நிா்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கானும்
தீர்மானங்கள் ஒரு மனதாக செயற்குழு நிர்வாகிகள் அனைவராலும் நிறைவேற்றப்பட்டது
இவண்
KR TNPGTA (KALLAR RECLAMATION - TAMILNADU POST GRADUATE TEACHERS ASSOCIATION)
மாவட்ட மையம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...