முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.
மேலும் தாவர வேதியங்கள் அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள் புற்றுநோயினை வராமல் தடுக்கிறது. தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும்.
சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் உள்ளது. உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது.
செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் பங்கெடுக்கிறது. சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களை வடிகட்டும் திறன் உண்டு.
எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். உடலுக்கு நோயெதிர்ப்பு திறனைஅதிகரிக்க செய்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...