மூலிகைகளின் அரசி"துளசி "
Oscimum sanctum என்ற தாவரவியல் பெயர் கொண்ட துளசியில் வெண்துளசி, கருந்துளசி என இருவகைகள் உள்ளன. இந்த கருந்துளசியை கிருஷ்ண துளசி என்றும் கூறுவார்கள். காட்டுப் பகுதிகளில் இன்னும் பலவகை துளசிசெடிகள் உள்ளன. உலகமெங்கும் துளசி செடிகள் இருந்தாலும் இந்தியாவில் வளரும் துளசி வகைகளை கிருஷ்ண துளசி, ராம துளசி, பபி துளசி(Babi Tulsi), துருத்ரிகா துளசி(Drudriha Tulsi), துகாஸ்மியா துளசி(Tukashmiya Tulsi) என்று வகைப்படுத்துகிறார்கள்
‘துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா சளிப் போயிடும்...’ என்ற ஒற்றை சொல்லில் அலட்சியப்படுத்தும்
துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.
துளசி நோய் நிவாரணி மட்டுமல்ல, சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.
துளசியில் வேதிப்பொருட்கள்!
Flavonoids, Proline, Ascorbate போன்ற சத்துப் பொருட்கள் இருப்பதால், Anti Oxidant ஆக செயல்படுகிறது. மேலும் துளசி Anti Oxidant ஆக செயல்படும் Glutathione என்கிற சத்துப் பொருளை உடலில் அதிகரிக்கச் செய்கிறது. துளசியில் உள்ள Caryophyllene என்கிற வேதிப் பொருள் Anti Inflammatory, Anti Fungal, Anti Aging, Decreases Cytotoxicity போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
Citronellol, Myrcene, Limonene, Camphene, Anothole, Cimeole போன்ற வேதிப் பொருட்கள் இருப்பதால் நீரிழிவு, ஆஸ்துமா நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. Citronellol பூச்சிகளுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளது. Camphene, Cineole போன்றவை Lung Congestion பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறது. துளசியில் உள்ள அசிட்டிக்அமிலம் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுவதோடு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது.
காய்ச்சலுக்கு அருமருந்து!
மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது... இதுவரை வந்த காய்ச்சல், இனி வரப்போகும் காய்ச்சல் என எந்த காய்ச்சலாக இருந்தாலும், துளசியிடம் இருக்கிறது தீர்வு. இதை உலகளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏற்கனவே வைரஸ் காய்ச்சல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். ‘‘10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, போர்வை கொண்டு உடம்பு முழுக்க போர்த்தி படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்.
மன அழுத்தம் குறையும்!
துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.
நுரையீரல் தொற்று!
அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.
இருமலை போக்கும்!
சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால்(Eugenol) உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.
ரத்த அழுத்தம் குறையும்!
இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றை சொல்லலாம். 'Diabetes என்ற சர்க்கரை நோய், 'Obesity ' என்ற உடல் பருமன், 'Blood pressure என்ற ரத்த அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில் பலருக்கும் இருக்கிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்கும். துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.
தோல் நோய் போக்கும்!
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்’’.
இளமையை காக்கும்!
இவையெல்லாம் விட, என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.
உடலுக்கான கிருமிநாசினி!
வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி. தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றம் இருக்கவே இருக்காது. குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்து குளித்தால் வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...