அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில்
மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு
மாதம் 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மாற்றுத்திறனாளி
குழந்தைகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை தற்போது 4 சதவீதமாக
உயர்த்தி உள்ளோம். மேலும் அவர்களது தேவைக்கு ஏற்பஉதவி வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
அரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சில இடங்களில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களது
கோரிக்கைக்காக ஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவது என்பது
வேறு, அரசாணையை எரிப்பது என்பது வேறு. அரசு சார்பிலும் அரசாணையை எரித்த
ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பெற்றோருக்குப்பின் பராமரிக்க, காப்பகம் தேவை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, விரைவில் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

First ivaruku oru notice vidanum..epo parthalum edho solitu poidraru edhu seyal padutharadhu illa..summa poi soldraru nu
ReplyDelete