சென்னை: நுாலகர்
பதவிக்கான தேர்வு தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அண்ணா
நுாற்றாண்டு நுாலகம், தொழில் துறை, வேளாண் துறை, சட்டசபை போன்றவற்றில்
காலியாக உள்ள, 29 நுாலகர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, 2019 பிப்.,
23ல் நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது. திடீரென தேர்வு நிறுத்தி
வைக்கப்படுவதாக, டிச., 18ல், தெரிவித்தது. இதையடுத்து, நிறுத்தி
வைக்கப்பட்ட நுாலகர் பதவிக்கான தேர்வு, மார்ச்சில் நடக்கும் என,
டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் அறிவித்துள்ளார். இதன்படி,
தொல்பொருளியல் துறை நுாலகர் பதவிக்கு, மார்ச், 31; மற்ற துறை நுாலகர் பதவி
களுக்கு, மார்ச், 30லும் தேர்வு நடைபெற உள்ளது.'குரூப் - 2' பதவிகளுக்கான
பிரதான தேர்வு, பிப்., 23ல் நடத்தப்படுவதால், புதிய தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது என, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Sir Enna qualify
ReplyDelete