ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையை போல் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடையை ேபான்றே அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும்.தனியார் பங்களிப்பு நிதி மூலம் 122 பள்ளிகளில்ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
புதிதாக தொடங்கப்பட உள்ளஎல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி கற்றுத்தரப்படும். கோபி அருகே உள்ள கொளப்பலூரில் அரசு சார்பில் புதிய டெக்ஸ்டைல் பார்க் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும். கோபி தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1,840 வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும் 2,800 வீடு கட்ட ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...