கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு,
உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு கல்வியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கினர்.
முதற்கட்டமாக சத்தான உணவுகள், அவற்றை உட்கொள்ளும் விதம் குறித்து, மாணவர்களுக்கு விளக்க, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, உணவில் உள்ள கலப்படத்தை கண்டறியவும், தவிர்க்கவும் பயிற்சி வழங்கப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''தலைமை ஆசிரியர்கள், 197 பேருக்கும், ஒரு லட்சம் குழந்தைகளுக்கும், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி தொடரும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...