'பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய
வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்து உள்ள மனு:அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2012 மார்ச்சில், உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரத்து, 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டும் பணிபுரிகின்றனர். பணியில் சேர்ந்த போது, 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. எட்டு ஆண்டுகளில், 2,700 ரூபாய் மட்டும் தான், ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படாததால், பகுதி நேர ஆசிரியர்கள், பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
வரும் சட்டசபை கூட்டத் தொடரில், பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை, வெளியிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது
THEY COME 3 HALF DAYS TO SCHOOL.
ReplyDelete