தமிழ் மொழியில் முதன்முதலாக 'தந்தி'யை
கண்டுபிடித்த சிவலிங்கம், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று
(டிச.16) காலமானார். அவருக்கு வயது 94. அவரது உடலுறுப்புகள், திருச்சி அரசு
மருத்துவமனையில் தானமாமக வழங்கப்பட்டது.
'தந்தி' என்று தபால்காரர் வந்து சொன்னாலே ஒரு
பதற்றம் தான் காணப்படும். நல்ல விஷயமும் வரும், கெட்ட விஷயமும் வரும்.
தொலைபேசிக்கு அடுத்தபடியாக வந்தது தந்தி என்னும் தகவல் பரிமாற்றம். 1900-ல்
உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சீமென்சு அண்டு ஆல்சுகே நிறுவனம்
தயாரித்தது அச்சிடும் தந்திக் கருவி. தந்தி எனப்படுவது ஓரிடத்திலிருந்து
தொலைவில் உள்ள வேறோரு இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்பட்ட
கருவி.இந்தியாவில் தந்தி சேவை பிரிட்டனின்
கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது. 1902
முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய அஞ்சல் துறை
சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-முதல் தொலைத்தொடர்புத்
துறைக்கும் பின்னர் 2000இல் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.தமிழில் முதன் முதலாக தந்தியை கண்டுபிடித்தவர்
திருச்சியைச் சேர்ந்த சிவலிங்கம். 1961ஆம் ஆண்டு அஞ்சல் துறை அமைச்சர்
டாக்டர் பி.சுப்ரமணியம் முன்னிலையில் தமிழ் தந்தியை வெற்றிகரமாக இயக்கி
காட்டினார்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற
சிவலிங்கம் கர்நாடக இசை பாடுவதிலும் நாடகங்கள் நடிப்பதிலும் திறமை
பெற்றவர் அவருடைய மறைவு தமிழ் நாட்டிற்கு பேரிழப்பு என தமிழ் அறிஞர்கள்
தெரிவிக்கின்றனர். 99 சதவீதம் பயன்படுத்தப்படாததால் தற்போது இச்சேவை
கைவிடப்பட்டது. இந்தியாவில் தந்தி சேவை 2013ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது.
தமிழ் மொழியில் முதன்முதலாக 'தந்தி'யை
கண்டுபிடித்த சிவலிங்கம், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று
(டிச.16) காலமானார். அவரது உடலுறுப்புகள், திருச்சி அரசு மருத்துவமனையில்
தானமாமக வழங்கப்பட்டது.மறைந்த சிவலிங்கம் மூன்று புத்தகங்களை
எழுதியுள்ளார்.திருக்குறளுக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார் தன்னுடைய 86
வயதில் ஆங்கில காதல் கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு புத்தகமாக
வெளியிட்டுள்ளார். பணியில் இருக்கும் போது தொழிற்சங்கத் தலைவராக சிறப்பாக
பணியாற்றிய இவர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை
முன்னின்று நடத்தியுள்ளார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!
ReplyDelete