(S.Harinarayanan)
மிகக்குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் காண துடிப்பது குறைமாத குழந்தைகள்
போன்றவை தான்,அது போன்றதுதான் இயற்கைக்கு முரணான காய்கனி உற்பத்தி.
ஹைபிரிட் தக்காளீ,ஹைபிரிட் வெங்காயம்,ஹைபிரிட் எலுமிச்சை என எங்கெங்கு காணினும் ஹைபிரிட்டும்,சீட்லெஸ்ஸும் தான் ...
நாவல்பழம்,இலந்தைப்பழம்,ஈச்சம் பழம் எல்லாம் விரும்பி சாப்பிட்ட மக்கள் ஆப்பிள்,ஆரஞ்சு மட்டுமே உயர்ந்த பழ வகைகள் என தற்போது கருதுகிறார்கள்.
முன்னாடி ஸ்கூல் அருகில் இம்மாதிரியான பழங்கள் விற்கும்.....
இப்ப
ஸ்கூல் அருகில் உள்ள கடைகளில் சரம் சரமாக கண்ட கழிய எண்ணெய்களில் இருந்து
பொறிக்கப்பட்ட சிப்ஸுகள் தான் கலர் கலரான பாக்கெட்டுகளில்
விற்கப்படுகிறது...
அடிப்படையிலேயே சீட்லெஸ் பழங்கள்,
அவற்றிலுள்ள இனிப்புச் சுவைக்காக வணிக நோக்கில் கொண்டு வரப்பட்ட வீரிய
ஒட்டு ரகங்கள். தற்போது சந்தையில் திராட்சை, பப்பாளி போன்றவை விதையில்லாமல்
ஒட்டுரக விதைகளால் விளைவிக்கப்படுகின்றன. சீட்லெஸ் பழங்களைக் கொண்டு
வந்ததற்கான காரணம், அதிக லாபம் ஈட்டவும், அதிக அளவில் பழங்களை உற்பத்தி
செய்யவும்தான். ஆனால், இந்த விதையிழப்பு என்கிற சீட்லெஸ் தொழில்நுட்பம்
இயற்கையின் சமச்சீர் நிலையைக் குறைக்கிறது. ஒரு கனி எப்படி அமைய வேண்டும்
என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும்.
இயற்கை
தீர்மானிக்கும் ஒரு விஷயத்தை மனிதன் தன்னுடைய தேவைக்காக மாற்றியமைக்கக்
கூடாது. இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி, நோய்த்தாக்குதல் ஏற்படும்
வாய்ப்புகள் அதிகரிக்கலாம். காலச்சூழ்நிலையில் மரபணுக்கள் மாற்றம்
அடைந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டு களுக்கு
முன்னால் இருந்த வாழைப்பழத்தில் பெரிய அளவிலான விதைகள் இருந்தன. இன்றும்,
கடைகளில் விற்பனை செய்யப்படும் நாட்டு வாழைப்பழங்களில் கடுகு வடிவிலான
தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். காலத்திற்கேற்ப அந்தத் தாவரம் இயல்பாகவே
தனது தன்மையை மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால், மனிதன் தனது அவசரத்
தேவைகளுக்காக விதையை நீக்கம் செய்வது இயற்கைக்குப் புறம்பானது.
பன்னீர்
திராட்சையை விதைகளுடன் உண்ணும்போது விதையிலுள்ள ‘ரிசர்வெட்டால்’ என்கிற
பொருள் புற்றுநோயைக் குணப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள். வெளிநாட்டுச்
சந்தையில் திராட்சையின் விதைகள் கிலோ 1200 டாலருக்கு விற்கப்படுகின்றன.
ஆனாலும், உடலுக்கு நன்மை தராத சீட்லெஸ் திராட்சை வாங்கவே பலரும் ஆர்வம்
காட்டுகின்றனர்.
ஒவ்வொரு
விதைக்கும் ஒரு பயன் கட்டாயம் இருக்கும். ஒரு விதை ஒரு தாவரத்தை உருவாக்க
கூடிய தன்மை, தானாக மகரந்தச்சேர்க்கைக்கு உட்பட்டுக் கனியாகும் தன்மை எனப்
பல சிறப்புத் தன்மைகளைப் பெற்றிருக்கும். ஒட்டுமொத்தமாக சீட்லெஸ் விதைகளையோ
அல்லது பழங்களையோ பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், விதைகளுக்கு
கார்ப்பரேட்டுகளிடம்தான் கையேந்த வேண்டும். முன்பெல்லாம் விவசாயிகள்
வீட்டிலேயே விதைகளைத் தேவைக்கு ஏற்ப எடுத்து வைத்துக்கொள்வது வழக்கம்.
இயற்கையாகவே
விதையுள்ள பழங்கள்தாம் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. விதையில்லா திராட்சை,
பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் இன்று விதையில்லாமல்
கிடைக்கின்றன. வீரிய ரக விதைகளைக் கொண்டு விளைவிக்கப்படும் இவற்றில்
ஆக்சின்(auxin) என்ற ரசாயனம் கலக்கப்படும். இந்த முறைக்கு ‘பார்த்தினோ
கார்பிக்’ என்று பெயர். இத்தொழில்நுட்பத்தின் மூலம், பழங்களில் விதை
உருவாவதைத் தடுத்து சதைப்பகுதியை அதிகமாக்கிக் கொடுத்துவிடும். ஆனால்,
பழங்களின் இயற்கைத்தன்மையே விதைகளைக் கொண்டிருப்பதுதான்.
இந்த
சீட்லெஸ் விதைகளில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்களினால் சிலருக்கு
அலெர்ஜியும் வரலாம். இதுதவிர சீட்லெஸ் விதைகளில் ஜீன்களின் கட்டமைப்பு
மாற்றப்படுவதால், அவ்விதைகளில் உருவாகும் பழங்களை உண்பதால், உண்பவர்களின்
ஜீன்களிலும் படிப்படியாக மாற்றம் நிகழலாம். நிரந்தரமாக உடலில் தங்கும்
நோய்களைக்கூட இந்த சீட்லெஸ் பழங்கள் ஏற்படுத்தும். நமக்குக் கிடைக்கும்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆர்கானிக் வகையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
அதேபோல, விதையுள்ள பழங்களை அதிகமாக உண்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு
நல்லது.
இந்த விதையில்லா
பழங்களில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனங்கள், பழங்களை சீக்கிரம் கெட்டுப் போக
விடாது. ஆனால் இப்பழங்கள் நம் உடலுக்கு எந்த விதமான சத்துகளையும்
கொடுக்காது.
சீட்லெஸ் பழங்களை சாப்பிடுவதால், புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும், தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்படும்.
சீட்லெஸ் பழங்களில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனங்களினால், சிலருக்கு அலர்ஜி மற்றும் ஜீன்களில் பல மாற்றங்கள் உண்டாகும்.
என்ன தான் பழங்கள் சாப்பிட்டாலும் குழந்தைகளுக்கு வைட்டமின்களோ நோயெதிர்ப்பு சக்தியோ கிடைப்பதில்லை.
அதனால் பெரும்பாலும் செயற்கை முறையில் விதை உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்படும் சீட்லெஸ் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...