(சீ.ஹரிநாராயணன்)
நாகரிக
மறுமலர்ச்சியால் இன்று, பானைகளில் தண்ணீர் ஊற்றி வைப்பது மட்டுமன்றி, உணவு
சமைப்பது கூட அடியோடு மறக்கடிக்கப்பட்டு விட்டது. நாளடைவில், பல்வேறு
நோய்களுக்கு ஆளாகி வரும் மக்கள்,அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு
வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்துவருகிறது. மண்பானையில் சமைக்க அலுமினியம்,
காப்பர், எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பாண்டங்களையே
பயன்படுத்துகிறார்கள். ஹோட்டல்களிலும் மண்பாண்டங்களில் சமைத்துப்
பரிமாறுவதையே வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
மண்பானையோட
அருமையை உணர்ந்து, இன்னைக்கு நட்சத்திர ஹோட்டல்கள்கூட மண்பானைச் சமையல்ல
அசத்துறாங்க. நகரங்கள்ல சில ஓட்டல்கள்ல, 'மண்பானை சமையல்னு' போர்டுவெச்சு
மக்களை ஈர்க்குறாங்க. இப்படி ஒருபக்கம் மண்பானை மேல மக்களுக்குக் கவனம்
திரும்பியிருக்கிறது வரவேற்கக்கூடியதுதான். அதேமாதிரி எல்லாரும் நம்
முன்னோர்கள் அனுபவத்துல சொன்னதை உணரணும்.
அதுமட்டுமில்லாம, மண்பானைத் தண்ணியைக் குடிச்சா நோய் எதுவும் வராது; அதனால மண்பானையைப் பயன்படுத்துங்க.
மண்பானைச்
சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை
அதிகரிக்கக்கூடியது. மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில்
செரிமானாகும்.
பொதுவாக,
உணவைச் சமைக்கும்போது, உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள்
ஆவியாகிவிடும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில்
(Chlorophyll) எளிதில் ஆவியாகிவிடும். ஆனால், மண்பானையில் சமைக்கும்போது
அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.
மண்பானையில்
உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும்
ஊடுருவும். இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த
உணவைப்போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
மண்பானைச்
சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை
மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக்
காரணம்.
மண்பானையில்
சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத்தத் தேவையில்லை. மற்ற பாத்திரங்களைவிட சீரான
வெப்பநிலையை அதிக நேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு
நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். மேலும், மண்பானை நன்மை செய்யும்
பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.
மண்பாண்டங்கள்
உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல
பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க
உதவும். குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக்
குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும். இப்படி மண்பானையின்
மகத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். அறுசுவையான உணவும் ஆரோக்கியமான
உணவும் கிடைக்க வேண்டுமென்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே
சிறந்தது”
Good information sir
ReplyDeleteGood information sir
ReplyDelete