தர்மபுரி மாவட்டத்தில்,மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெரகோடஅள்ளி கிராமத்தில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளியில் பத்து மாணவர்கள் படிக்கின்றனர் .இங்கு பொருளாதரத்தில் பின் தங்கிவரும் மக்களின் பிள்ளைகளின் ஆரம்ப கல்வி தேவையை பூர்த்தி செய்து வரும் இப்பள்ளி கணினி, ப்ரொஜெக்டர், 4D+ கிளாஸ் ரூம், தனியார் பள்ளிகளை போன்று டி-ஷர்ட், டைரி என நவீன வசதிகளுடன் உருமாறி வருகிறது.
CLICK HERE TO DOWNLOAD ANDROID APP
அதன் தொடர்ச்சியாக பள்ளியின் செயல்பாடுகளை பெற்றோர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதியாக, அரசு பள்ளியை வளர்ச்சி அடையச் செய்யும் நோக்கத்துடன் பள்ளிக்கானஆன்ட்ராய்டு செயலி வெளியிட்டு தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் "PUPS KERAGODAHALLI" என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,இதில் பள்ளியில் நடைபெறும் கற்றல் நிகழ்வுகள்,மாணவர்களின் தனி திறமைகள் பதிவேற்றப்பட்டுள்ளது . இது குறித்து அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில் : எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தரமான, நவீன கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும்,மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போது பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.அதன் தொடர்ச்சியாக தற்போது பள்ளியின் செயல்பாடுகளை பெற்றோர்கள்,ஊர் பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதியாக ஆன்ட்ராய்டு செயலி வெளியிட்டுள்ளது.மேலும் எங்களின் பணி தொடரும் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...