மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகமும்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையும் இணைந்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Bassa sangam என்ற பெயரில் அனைத்து இந்திய மொழிகளையும் வாய்மொழியாக பேசுவதற்கு பயிற்சி அளித்து வருகிறது..இந்த திட்டமானது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூடலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ரெ.சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார்.வேப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் திருமதி செந்தமிழ்செல்வி அவர்கள் தலைமை தாங்கினார்.ஆலத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ் பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் கூடலூர் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.ஆசிரியர்களையும் மாணவ செல்வங்களையும் பள்ளி தலைமை ஆசிரியை மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்றார். தமிழாசிரியை திருமதி
தங்கப்பொண்ணு கருத்தாளராக அரிய கருத்துகளை ஒளி ஒலி அமைப்பின் மூலம் வழங்கினார். அறிவியல் ஆசிரியர் இளங்கோவன் நன்றி கூற மாணவர்கள் விடைபெற்று சென்றனர்Revision Exam 2025
Latest Updates
Home »
» அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Bassa sangam - புதிய முயற்சி!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...