கோபி, நாமக்கல்பாளையத்தில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில்
கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்,
"இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள
மாணவ மாணவிகளுக்கு ஒரே மாதிரியான சீருடைகளும், ஒன்பது முதல் பதம் வகுப்பு
வரை ஒரே மாதிரியான சீருடைகளும், பதினொன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை
ஒரே மாதிரியான சீருடைகளும் என நால்வகை சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் கொளப்பலூர்
பகுதியில் 2019 ஜனவரி மாதம் ஜவுளி பூங்கா ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டப்பட
உள்ளது.இந்த ஜவுளி பூங்காவின் மூலம் குறைந்தது 7500 பேருக்கு வேலை வாய்ப்பு
நிச்சயமாக கிடைக்கும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போதைய தமிழக
முதல்வர் நல்ல புதிய திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகின்றார். இதனை
பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். " என அமைச்சர்
செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும், அங்கன்வாடி பள்ளியுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட அனைத்து
குழந்திங்க்ளுக்கும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க
இருக்கின்றோம். இதனை தொடர்ந்து இக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச
பயிற்சியும் வழங்க இருக்கின்றோம்.
அதனுடன், அனைத்து அரசு பள்ளிகளிலும் ''மெய் நிகர்''(ஸ்மார்ட் க்ளாஸ்) வகுப்பறை அமைக்கப்படும்.' என்றும் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...