கறம்பக்குடி ஒன்றிய பிலாவிடுதி அரசு ஆதிதிராவிட
நல பள்ளியை சுற்றியுள்ள 300 குடும்பங்களுக்கு சுமார் ரூ.600000 மதிப்புள்ள வாழ்வாதர பொருட்கள் வழங்கிய உடுமலைப்பேட்டை கல்வி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் .
01.12.2018 அன்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி சாந்தி அம்மா
அவர்களின் வழிகாட்டுதலுடன் உடுமலைப்பேட்டை மாவட்ட கல்வி
அலுவலர் திரு.செ.மணிவண்ணன் கல்வி மாவட்ட
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பரந்த கொடை உள்ளத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கும் சுற்றுவட்டார பொதுமக்கள் உட்பட 300 குடும்பங்களுக்கு சுமார் 6 இலட்சம் மதிப்புள்ள அரிசி 10 கிலோ பருப்பு ,சர்க்கரை, ரவை,மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள், உப்பு ,டீ தூள் ,சேமியா கடுகு, சீரகம், சோம்பு கோதுமை மாவு ,எண்ணெய் பாய், போர்வை,நைட்டி,சேலை,கைலி,துண்டு, டீசர்ட், வாலி,மக் ,பிளேட்,
தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, தார்ப்பாய்,குடம்,பேஸ்ட் பிரஷ்,நாப்கின் நோட்டு, பேனா, பென்சில்,கொசுவர்த்தி அனைத்துவகை பிஸ்கட்
ரெடிமேட் சப்பாத்தி உட்பட 50 க்கும் மேற்பட்ட விலைமதிப்பில்லாத
பொருட்கள் வழங்கப்பட்டது
சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர்
திரு.அண்ணாமலை நிரஞ்சன் கலந்து கொண்டு நிவாரண
பொருட்களை வழங்கினார். லெம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
திரு. ஜெ.சுதந்திரன் ,பள்ளி தலைமை ஆசிரியர்
மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட
எங்கள் பகுதி மக்களுக்கு வாழ்வாதர பொருட்கள் வழங்கிய அனைவருக்கும் இவ்வூர் மக்களின்
சார்பாக நன்றிகள்.
அனைவருக்கும் இதயபூர்வ நன்றிகள்
ReplyDeleteநிவாரணப்பணிக்கு பொருளாகவும், ரொக்கமாகவும் உடல் உழைப்பையும் தந்து சோர்வில்லாது துரிதமாகவும் துடிப்புடனும் செயல்பட்டு வெற்றிகரமாக இப்பணி முடிய காரணமாக இருந்த திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் ஊக்கமும் ஆக்கமும் அளித்த உடுமலைப்பேட்டை மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் அயராது உழைத்த அலுவலக நண்பர்களுக்கும் நன்றி.
ReplyDelete