கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 50 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இணைய தேடுபொறியான, 'கூகுள்' நிறுவனம், பள்ளி மாணவ -
மாணவியரிடையே, 'அனிமேஷன்' செய்ய தேவையான அடிப்படை குறித்து, ஆண்டுதோறும்,
ஆன்லைன் தேர்வு நடத்துகிறது.ஆண்டு இறுதியில், நவம்பர் மாதம் நடைபெறும்
இத்தேர்விற்கு, நாடு முழுவதும் ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில் பயிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், 50 பேர்
பங்கேற்றனர்.கடந்த நவம்பரில் நடைபெற்ற இத்தேர்வுக்கான முடிவுகள், இரு
நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.இதில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியிலிருந்து பங்கேற்ற, 50 மாணவ - மாணவியரும் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட இப்பள்ளியில் பயிலும், ஏழை
மாணவர்கள், 'கூகுள்' நிறுவன தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, மாணவர்கள்
மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Supr
ReplyDeleteGud job
ReplyDelete