தரம் உயர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாதமாக சம்பளம் இல்லாமல் அவதி, Express Pay Order எப்போது கிடைக்கும்?
பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை (நிலை) எண்: 165, நாள் 07.08.2018இன் படி
2018 - 2019 ஆம் கல்வி ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.. அதன்படி 100 தலைமை ஆசிரியர்
பணியிடங்களும், 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்
உருவாக்கப்பட்டது.மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 100
பள்ளிகளின் தலைமை ஆசிரியர் களுக்கு 100 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு
நிர்வாகமாறுதல் வழங்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டநடுநிலைப் பள்ளிகளில்
பணியாற்றிய 300 பட்டதாரி ஆசிரியர்கள் ஈர்த்துக் கொள்ளப்பட்டனர். மீதம் உள்ள
200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம்
நிரப்பப்பட்டது.இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் பணியாற்றி வரும்
ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழக அரசு
கருவூலத்துறைக்கு விரைவு ஊதிய ஆணை ( EXPress Pay Order) வழங்காததால் ஊதியம்
கிடைக்கப் பெறவில்லை. கடந்த ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு
ஓரிரு மாதங்களில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுநாள்
வரை வழங்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குசம்பளம்
இல்லாததால்தீபாவளிப் பண்டிகை மன வலியோடு சோக தீபாவளியாகிப் போனது.
தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு . பொங்கல் பண்டிகைக்கு என்ன செய்வது என
மனக் குமுறலோடு புலம்பிக் கொண்டுள்ளனர்.மேலதிகாரிகளிடம் கேட்டாலும் பதில்
இல்லை. 600ஆசிரியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்விக் கடன்,
வீட்டுக் கடன், அன்றாட குடும்பச் செலவு களுக்கு பணமின்றி தவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக ExPress Pay order வழங்க வேண்டுமென்பதே
ஆசிரியர்களின் ஏக்கம்.ஏக்கத்தை தீர்க்குமா தமிழக அரசு?
மிகவும் கடினமான சூழலாக உள்ளது. அரசு விரைவானையை விரைந்து வழங்க வேண்டும்.
ReplyDelete