வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி
உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வங்கக்கடலில்
அந்தமானுக்கு அருகே புதியதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளன. இதன்
காரணமாக டிச.,6 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில்
காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
இதனால் டிச.,9ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல், ஆயக்குடி மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
Please nellai cyclone
ReplyDeleteReally
ReplyDeleteok
ReplyDelete