தமிழகத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டு
மாநிலம் முழுவதும் 150 மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர்கள் ₹9.300-₹34,800 என்ற ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் ₹4,600 உடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் பணி நியமனம் ஓராண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 18.07.2018 முதல் 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 200 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு இப்பள்ளிகளிலும் தற்காலிக அடிப்படையில் தலா 6 பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர் என மொத்தம் 1200 பட்டதாரி ஆசிரியர்கள், 200 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கும் 1.06.2018 முதல் 31.05.2021 தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹36,000 முதல் ₹1,15,700 வரையும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ₹2,600 முதல் ₹65,500 வரையும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து வழங்கப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறையும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககமும் வெளியிட்ட இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...