Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.12.18

திருக்குறள்


அதிகாரம்:அடக்கம் உடைமை

திருக்குறள்:125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

விளக்கம்:

செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அந்த எல்லோரையும் விட செல்வந்தர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

பழமொழி

The law maker should not be a law breaker

வேலியே பயிரை மேயக்கூடாது.

இரண்டொழுக்க பண்புகள்

* என் தேர்வுக்கான பாடங்களை நல்ல முறையில் படித்திடுவேன்.

* நான் என் தேர்வுகளை நேர்மையான முறையில் எழுதிடுவேன்.

பொன்மொழி

உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்ந்தவனாக்கும். தாழ்ந்த எண்ணங்கள் ஒருவனைத் தாழ்ந்தவனாக்கும்.

        - அரிஸ்டாட்டில்

  பொது அறிவு

1.ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?

நியூயார்க்

2.  செஞ்சிலுவை சங்க சர்வதேச குழுவின் தலைமையகம் எங்கு உள்ளது?

  ஜெனீவா

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பிஸ்தா பருப்பு



1. 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், பைடோ ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் பிஸ்தாவில் நிறைந்துள்ளன.

2. தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.

3. பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள்.

English words and Meaning

Lapse. சிறு தவறு,நழுவு
Lark.    வானம்பாடி
Magnify மிகைப்படுத்து
Mariner.  மாலுமி
Noodle.  மூடன்

அறிவியல் விந்தைகள்

நெருப்பு கோழி
*உலகின் மிகப் பெரிய பறவை. பறக்க முடியாத பறவை.
* பறக்க முடியா விட்டாலும் மணிக்கு 70 கி. மீ வேகத்தில் ஓடக்கூடிய பறவை ஆகும்.
* இவற்றின் இறக்கையின் நீளம் 2 மீட்டர் ஆகும்.
* கால்கள் மிக வலியது. இவற்றின் ஒரு உதை மனிதன் மற்றும் சிங்கத்தை கூட கொல்ல வல்லது
* உலகின் மிகப் பெரிய முட்டை இதன் முட்டை தான். 15 செ. மீ நீளம் உள்ளது.

நீதிக்கதை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

“ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.

“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.

வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார்.

“ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.

அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.

ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா.

“குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.

அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.

விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.

அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.

“தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.

அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.

அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

“சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.

அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.

“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன் “கொல்” லென்று சிரித்தனர்.

அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

இன்றைய செய்திகள்
21.12.2018

* அமெரிக்காவிற்கான இந்திய தூதராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

* இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன், டபிள்யு.வி. ராமன் ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Today's Headlines

* Harsh Vardhan Shringala has been appointed as ambassador to the United States.

* The high court has been ordered to remove the ban imposed on online pharmacies.

* President's rule in Jammu and Kashmir: Yesterday came into force.

* Indian captain  Virat Kohli has been ranked number one in the list of batsmen in the ICC Test rankings.

* Former South African player Gary Kirsten, WV  Raman's name is being reviewed for the Indian women's cricket team coach.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive