சென்னை:அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், 2,000 பேருக்கு, 'மெமோ' கொடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்கள், 1988 ஜூன், 1 முதல், மத்திய அரசுக்கு
இணையான ஊதியம் பெற்றனர். இது, ஏழாவது ஊதிய மாற்றக்குழு அரசாணை மற்றும்
எட்டாவது ஊதிய மாற்றக்குழு அரசாணை வழியே, தட்டிப்பறிக்கப்பட்டது.எனவே,
மத்திய அரசுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்க
வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், நவம்பர்,
26ல் அரசாணை எரிப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.போராட்டத்தின்
போது, அரசாணைகளை எரித்த, 2,000 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்கும்படி,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி
உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், காவல்
துறையினரிடமிருந்து, அரசாணை நகலை எரித்த ஆசிரியர்கள் பட்டியலை
பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், அவர்களுக்கு, 'மெமோ' கொடுக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...