Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.12.18

திருக்குறள்


அதிகாரம்:நடுவுநிலைமை

திருக்குறள்:115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம்:

ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

பழமொழி

Think before you speak

 சிந்தித்துப் பேசு

இரண்டொழுக்க பண்புகள்

* விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த  மாட்டேன்.

* சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை
பெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.

 பொன்மொழி

பெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.

        - ஔவையார்

பொதுஅறிவு

1.தேசிய சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஜனவரி 25

2. இந்திய அரசியலமைப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 நவம்பர் 26

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பலாப் பழம் 



*பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

* சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.

* பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் ஈராகச் சாப்பிட வேண்டும்.

* உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.

* எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

English words and meaning

Castle - கோட்டை

Clinic - மருந்தகம்

Hut - சிறு குடிசை

Penthouse - தாழ்வாரம்

Sky - scraper - வானளாவும் பலமாடிக் கட்டடம்

அறிவியல் விந்தைகள்

* நமது கைகளிலும் கால்களிலும் நம்  உடலின் மொத்த எலும்புகளில் பாதிக்கு மேல் காணப்படுகிறது.
* முயல்களும் கிளிகளும் பின்னால் திரும்பாமலே அவைகளுக்கு பின்னால் உள்ள பொருட்களைப் பார்க்க முடியும்
* 95% உதட்டுச்சாயம் மீன் செதில்களைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன
* எல்லா கோள்களும் கடிகார முள்ளுக்கு எதிர் திசையில் சுற்றும். ஆனால் வெள்ளி மட்டும் கடிகார முள் திசையில் சுற்றும்.

நீதிக்கதை

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.
இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.

சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.

அன்று இரவு அரசன் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.

இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.

மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. “இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!’ என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், “”அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?” என்று கேட்டான்.

கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, “”ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!”

“”இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என்றான் அரசன்.

“”நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை… அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது?” என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.

“”தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!” என்றான் அரசன்.

நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, “”மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,” என்றாள் கிழவி.

“”தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!” என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.

இன்றைய செய்திகள்

* தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

* நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களில் இனி சுட்ட களிமண் செங்கல்களைப்   பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

* ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக கனடாவை 5-1 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்திய அணி காலிறுதிக்கு நேரடித் தகுதி பெற்றது.

* முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 21 வயது மத்தியப் பிரதேச கிரிக்கெட் வீரர் அஜய் ரொஹேரா.

Today's Headlines

🌹 181 'free phone number will be introduced today for women's protection in Tamil Nadu.

🌹The federal government is considering imposing restrictions on the use of baked clay bricks in central government structures across the country.

🌹The Government of Tamil Nadu has ordered that industries should be made aware of the plastic products being used once.

🌹 Part of the World Cup hockey tournament,India defeated  Canada for 5-1 scoreline, and was directly qualified for the quarter-finals .

🌹 21-year-old Madhya Pradesh cricketer Ajay Rohrera has earned the honor of being the highest run-scorer in the first innings of the first cricket match💐

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive