ஜாக்டோ-ஜியோவின்
வேலைநிறுத்த போராட்டத்திற்குத் தடை கோரி தனிப்பட்ட அமைப்பால்
தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு இன்று (03.12.2018) பிற்பகல் *சென்னை உயர்
நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்காக நீதியரசர்கள் திரு.சாமிநாதன்
திரு.சசிதரன் அமர்வு முன்பு* விசாரணைக்கு வந்தது.
🔥
🛡 முன்னதாக, சென்ற ஆண்டு *செப்டம்பர் 2017-ல் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ
போராட்டத்திற்கு* எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை இவ்விருவரின் அமர்வே
விசாரித்திருந்தது. *அவ்வழக்கையும் இத்துடன் இணைத்துக் கொண்டு* விசாரணையைத்
தொடங்கினர்.
🔥ஜாக்டோ-ஜியோவின் போராட்டம் குறித்தும், நமது கோரிக்கைகளின் நியாயம்
குறித்தும் நன்கு அறிந்திருக்கும் *மாண்புமிகு நீதியரசர்கள் தற்போதைய
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.*
🔥
🛡 மேலும், *ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகள் தொடர்பாக சென்ற ஆண்டு
நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு எடுத்துள்ள
நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 10.12.2018-ற்குள் தமிழக அரசு தாக்கல்
செய்ய உத்தரவிட்டு* வழக்கை ஒத்தி வைத்தனர்.எனவே, ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தி சென்னை உயர்
நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதியரசர்கள் தமிழக அரசிற்கு அளித்துள்ள
உத்தரவினைத் தொடர்ந்து,
🔥
🛡 அரசின் அறிக்கை அளிக்கப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்தி
வைக்க ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உறுதியளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது.
*நீதிமன்ற செயல்பாடுகளுக்கு மதிப்பளித்து நீதி மன்றம் கேட்டுக்
கொண்டதற்கிணங்க,*
🔥
🛡 நாளை (4.12.2018) முதல் நடைபெற இருந்த *ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்டத்தினை 10.12.2018 வரை ஒத்திவைக்க* ஜாக்டோ-ஜியோ
ஒருங்கிணைப்பாளர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
🔥
🛡 இதனைத் தொடர்ந்து *நாளை (04.12.2018) திருச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள்
மற்றும் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களின் கூட்டம்* நடைபெற உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...