Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.12.18

திருக்குறள்


அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்

திருக்குறள்:110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

 பழமொழி

Hard work is the mother of good luck

நல்உழைப்பே நற்பேற்றின் தாய்

இரண்டொழுக்க பண்புகள்

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2. மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்

 பொன்மொழி

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.

  - அன்னைத்தெரசா

பொதுஅறிவு

1.இந்தியாவில் எந்த மாநிலத்தில் தங்கச் சுரங்கம் உள்ளது?

 கர்நாடகம்

2. விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை எங்கு உள்ளது?

 பத்ராவதி (கர்நாடகம்)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

ஆரஞ்சு பழம்

1. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.

2. ஆரஞ்சுப் பழச்சாறு பற்களை வலிமைப்படுத்தக் கூடியது. மேலும் பற்கள் தொடர்பான அனைத்துக் குறைபாடுகளையும் அகற்றும் தன்மை இதற்கு உண்டு.

3. இத்தகைய நற்பண்புகளைக் கொண்டுள்ள இந்த ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து 99 மில்லிகிராம் அமைந்திருக்கிறது. மேலும் வைட்டமின் பி-1 34 மில்லி கிராமும், பி-2, 17 மில்லி கிராமும், சி-19 மில்லி கிராம் என்ற அளவில் அமைந்துள்ளன. அதில் காணப்படும் சுண்ணாம்புச் சத்தின் அளவு 14 மில்லிகிராம் ஆகும்.

English words and meaning

Pigment.  பசை,வர்ணப்பசை
Perfidy.    துரோகம்
Parry.      திருப்பு,தவிர்
Partly.    சிறிதளவு
Pardon. பிழை,மன்னிப்பு

அறிவியல் விந்தைகள்

நீலத் திமிங்கலம்

* உலகின் மிகப் பெரிய விலங்கு என்ற பெருமைக்குரியது

* நீரில் வாழ்ந்தாலும் இது ஒரு பாலூட்டியாகும்.

* இதன் அதிகபட்ச நீளம் 30.5 மீட்டர்

* இதன் இதயம் ஒரு பெரிய காரின் அளவாகும். இதன் பெரிய இரத்த நாளத்தில் ஒரு குழந்தை விளையாட முடியும்

* இதன் நாக்கு மட்டுமே ஒரு யானை அளவில் இருக்கும். அதில் நாம் கால் பந்து விளையாடலாம்

நீதிக்கதை

காளான்களின் ராணி!

நிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும ் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.

ஒரு நாள், அங்கே வந்த ஒருவர்  செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.



இவ்வளவு நன்மைகள் செய்யும் ராணிக்கு, சிறப்பான பரிசு தர வேண்டும் எனப் பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் காளான்களோடு ஆலோசனை நடத்தின.

‘‘நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.

பல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.

திரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.

அதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.

அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின.

இன்றைய செய்திகள்

03.12.18

* கோவை- பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு

 *புதுடில்லி : 'டில்லியில் நிலவும் காற்றின் மாசை கட்டுப்படுத்தும் வகையில், செயற்கை மழை ...

*புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

* இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை

*உலக கோப்பை ஹாக்கி: இந்தியா - பெல்ஜியம் ஆட்டம் டிரா (2-2)

Today's Headlines

🌹 Coimbatore: 3 dead in swine flu

🌹 World Cup hockey: India - Belgium draw draw (2-2)

🌹NEW DELHI: In order to control the prevailing air pollution in Delhi, the artificial rainfall was to be created ...
🌹
New atmospheric substrate, Possibility of Heavy rainfall in North Tamilnadu

🌹 India's first indigenous rail train 'train 18' -180 km high speed record

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive