1. என்றாவது ஒரு நாள், தெரியாத ஒரு நபர் நமக்கு உதவியது உண்டு அல்லவா? நாம் எதிர்பாராத அந்தச் செயல், அதுதான் கருணை தினத்தின் நோக்கம்.
2. 1998ஆம் ஆண்டு, உலக கருணை இயக்கம் இந்த நாளை முதன்முதலில் கொண்டாடியது.
3. தற்போது உலகம் முழுவதும் 25க்கும் அதிகமான நாடுகள் இந்த இயக்கத்தில் பங்கெடுக்கின்றன.
4. ஆய்வாளர்கள் சிலரின் கூற்றுப்படி, நம்மை யாராவது சந்தோஷப்படுத்தினால், அத்தினம் முழுவதும் நாம் அதிகமான கருணையுடன் இருப்போமாம்.
5. இந்த நாளின் முக்கியமான நோக்கம், எல்லைகள், இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து நாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதே.
6. முதன்முதலில் உலக கருணை இயக்கம், டோக்கியோவில் 1998ஆம் ஆண்டு இதே நாளில்தான் நடைபெற்றது.
7. அது மட்டுமில்லாமல், ஜப்பானில் நடைபெற்றுக்கொண்டிருந்த சிறிய கருணை இயக்கத்தின் 35ஆம் ஆண்டு கொண்டாட்டமாகவும் அது இருந்தது.
8. கருணையின் வெளிப்பாடு நம் உடலில் ஆக்ஸிட்டோஸின் அளவை அதிகரிக்கிறது. இது இதயத்துக்கு மிகவும் நல்லது.
9. கருணையால் எண்டர்ஃபின்ஸும் (endorphins) சுரக்கும். இது இயற்கையான வலி நிவாரணியாக உடலில் செயல்படுகிறது!
10. கருணைச் செயல்பாடுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.
- ஆஸிஃபா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...