Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai.Net's Flash Test - Schedule 1 Announced!

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,



Padasalai.Net's Flash Test - Direct Link


Flash Test - Schedule Date:

2.12.2018 ஞாயிறு மாலை நடைபெறும் தேர்வுகள்:
  • 10th Maths (Tamil & English Medium) - 6.00 to 7.00 pm
  • 11th Chemistry (Tamil Medium) - 7.00 to 8.00 pm
  • 11th Commerce (English Medium) - 7.00 to 8.00 pm
  • 12th Chemistry (Tamil & English Medium) - 8.00 to 9.00 pm
1.12.2018 சனிக்கிழமை மாலை நடைபெறும் தேர்வுகள்:
  • 10th Tamil - 6.00 to 7.00 pm
  • 11th Tamil - 7.00 pm to 8.00 pm
  • 12th Tamil - 8.00 pm to 9.00 pm


       நம் பாடசாலை வலைதளத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு Study Materials, Centum Question Papers, Creative Questions, NEET Coaching Materials போன்றவற்றை வழங்கி வருகிறோம்.
         முன்னதாக நாம் அறிவித்தபடி 10 ,11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Flash  Test நடத்த இருக்கிறோம். இத்தேர்வை எந்த நேரத்தில் நடத்தலாம் என்பது குறித்த கருத்தை ஆசிரியர்களிடமும்,  மாணவர்களிடமும்  கேட்டிருந்தோம். அவற்றில் பெரும்பாலானோர் கருத்துப்படி வார இறுதி நாட்களில் மாலை வேளைகளில் இத்தேர்வுகளை நடத்த இருக்கிறோம்.
       கஜா புயல் காரணமாக கடந்த இருவாரங்களாக இத்தேர்வுகளை நடத்தாமல் தவிர்த்து வந்தோம். தற்போது நிலைமை ஓரளவு சீராகி உள்ளதாலும், அரையாண்டு தேர்வுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளதாலும் நாளை (1.12.2018) முதல் இத்தேர்வுகளை துவக்க இருக்கிறோம்.
      இத்தேர்வுகள் நமது ஆசிரிய குழுவினரால் மிக நுணுக்கமான கேள்விகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள பட்டியல்படி இத்தேர்வுகள் உரிய நேரத்தில் மட்டுமே நடைபெறும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மூன்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நமது பாடசாலை வலை தளம் சார்பாக சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே மாணவர்கள் முழுமையாக இத்தேர்வுக்கு தயார் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வினை எவ்வாறு எழுதுவது என்பது குறித்த டுடோரியல் வீடியோ நாளை காலை நமது வலைதளத்தில் வெளியிடப்படும் மாணவர்கள் அதனை அவசியம் பார்த்து வழிமுறைகளை தெரிந்து கொள்ளவும்.


தேர்வு அமைப்பு:
1. "சரியான விடையைத் தேர்ந்தெடு" என்ற அமைப்பில் 50 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும்.
2. முழு பாடப் பகுதியையும் படித்திருந்தால் மட்டுமே இத்தேர்வுகளை எழுத இயலும்.
3. தேர்வுகளில் பெரும்பகுதி வினாக்கள், Creative Questions & Book Inside Questions ஆக கேட்கப்படும்.
4. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி தேர்வுகள் தனித்தனியாக நடைபெறும். ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வினாக்களே இவற்றில் அமைந்திருக்கும்.
5. தேர்வு முடிவடைந்தவுடன் இத்தேர்வு வினாத்தாளை தயார் செய்த ஆசிரியர்களின் பெயர் விவரம் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்களின் விவரம் வெளியிடப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அவர்களின் பள்ளி முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதால் தெளிவான முழுமையான பள்ளி முகவரி வழங்குவது அவசியமாகும்.
6. அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட நாட்களில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்..
7. ஒவ்வொரு தேர்விற்கும் உரிய login password தேர்வு நாளன்று காலை வெளியிடப்படும்
8. முதலில் Login செய்யும் 100 நபர்களுக்கு மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.
9. How to Login Flash Tests? - Tutorial Video - Click Here
10. ---- 90% மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மட்டும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.


பின்குறிப்பு:
* தேர்வுகள் அனைத்தும் உரிய நேரத்தில் மட்டுமே நம் வலைத்தளத்தில் இருக்கும். உரிய நேரம் கடந்தபிறகு தேர்வுகள் முழுமையாக வலைதளத்திலிருந்து நீக்கப்படும்.
* தேர்வுகளில் கலந்து கொள்ள அதிகபட்சமாக 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். எனவே சரியான நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் Login செய்து காத்திருக்கவும்!


ஆசிரியர்களுக்கு,
ஆசிரியர்கள் நமது பாடசாலை வலைதளத்தின் Flash Test குறித்து தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Be Innovative!
Be Topper!
Best Of Luck!
என்றும் அன்புடன் பாடசாலை!






22 Comments:

  1. எங்்கு நடைபெறும்்

    ReplyDelete
  2. Sir eppadi apply pannuvathu

    ReplyDelete
  3. Eppadi login pannuvathu

    ReplyDelete
  4. Thanks for the test.sir.when login open sir.kindly inform Sir.

    ReplyDelete
  5. How login?Please send user id&password.

    ReplyDelete
  6. How to apply for this exam

    ReplyDelete
  7. How to login...link please

    ReplyDelete
  8. 11-ம் வகுப்பு தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கும் இது போன்று தயார் செய்திட வேண்டுகிறேன்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive