ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்நிலையில் 3-வது டி-20 போட்டியை காண ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் சிலர் 'Save Delta மற்றும் Save Tamil Nadu Farmers, Gaja Cyclone Relief' என்ற எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி நின்றவாறு இருந்தனர்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்கள் மீது உலக மக்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக சிட்னி மைதானத்தில் இந்தப் பதாகைகளுடன் நின்ற தமிழ் உறவுகளுக்கு நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்து வருகின்றனர்.போட்டிய்ன் நடுவே தமிழகத்தின் வலியை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்
salute tamila.
ReplyDeletesalute tamila.
ReplyDelete