மொபைல் :
கூகுள் செட்டிங்க்ஸ் – டிவைஸ் மேனேஜர் ( ஆண்ட்ராய்டு ) :
இதற்கு நீங்கள் உங்களின் தொலைந்து போன மொபைலில் டிவைஸ்
மேனேஜர் ஆப் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் மொபைலில் உள்ள “
கூகுள் செட்டிங்க்ஸிற்குள் ” செல்லுங்கள் ( பொதுவாக நீங்கள் பயன்படுத்தும்
“செட்டிங்க்ஸ்” அல்ல இது ).
உள்ளே செக்யூரிட்டி ஆப்ஷன்ஸில் நுழைந்து ‘டிவைஸ் மேனேஜர்’
என்பதின் கீழ் “Remotely locate this device” மற்றும் “Allow remote lock
and erase” ஆகியவற்றை டிக் செய்து கொள்ளுங்கள். மேலும் இதே கூகுள்
செட்டிங்க்ஸிற்குள் உள்ள “லொகேஷன்” ஆப்ஷனில் உள்ள கூகுள் லொகேஷன்
ஹிஸ்டரிக்குள் உள்ள “லொகேஷன் ஹிஸ்டரி” ஆப்ஷனை டிக் செய்து கொள்ளுங்கள்.
இனிமேல் உங்களது மொபைலை கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உள்ளன.
1. உங்கள் மொபைல் “சுவிட்ச் ஆன்” ஆகியிருந்து, ட்ராக் செய்யும் வகையில்
சிக்னலும் இருந்தால் வேறொரு நபரின் மொபைலில் டிவைஸ் மேனேஜர் ஆப் இன்ஸ்டால்
செய்து, android.com/devicemanager என்ற லிங்க்கினுள்ளே உங்களது கூகுள்
அக்கவுண்ட்டை சைன் செய்தால், உடனே கூகுள் மேப்பில் உங்களது மொபைலின்
இருப்பிடம் காட்டப்படும்.
2. உங்கள் மொபைல் “சுவிட்ச் ஆப்” ஆகியிருந்தால் லொகேஷன் ஹிஸ்டரிக்குள்
சென்று, கடைசியாக உங்கள் மொபைல் ரிப்போர்ட் செய்யப்பட்ட இடத்தை அறியலாம்.
இதனை google.com/settings/accounthistory க்குள் சென்று ப்ளேசெஸ் யூ கோ
(Places you go ) என்பதை தட்டி மேனேஜ் ஹிஸ்டரியை கிளிக்கினால் காணலாம்.
இவ்வாறு செய்தால் நீங்கள் குறிப்பிடும் நேரத்திற்குள் உங்களின் மொபைல்
எங்கெல்லாம் டிடெக்ட் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.
ஃபைன்ட் மை ஐ போன் ( ஐ போன் ) :
தொலைந்து போன ஆப்பிள் சாதனத்தை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம். ஆனால் அதற்காக
முன்னாலேயே இந்த செட் அப் உங்கள் சாதனத்தில் இருப்பதை உறுதிபடுத்திக்
கொள்ள வேண்டும். செட்டிங்க்ஸை க்ளிக் செய்து உள்ளே ஐ க்ளவுட் ( I cloud )
சென்று, ஃபைன்ட் மை ஐ போன்-ஐயும், சென்ட் லாஸ்ட் லொகேஷன் ( Send Last
Location ) -ஐயும் க்ளிக் செய்யுங்கள். பிறகு செட்டிங்க்ஸ் – பிரைவசி
க்குள் சென்று லொகேஷன் சர்வீசஸை க்ளிக் செய்யவும்.
இனிமேல் உங்களது மொபைலை கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உள்ளன.
1. மற்றொரு ஆப்பிள் சாதனத்தில் இலவசமான ஃபைன்ட் மை ஐ போன் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்.
2. உங்கள் டெஸ்க்டாப்பில் Icloud.com சென்று ஃபைன்ட் மை ஐ போன் கொடுத்தால் உங்கள் ஆப்பிள் சாதனத்தின் இருப்பிடம் தெரிந்து விடும்.
மேலும் இதன் மூலம் உங்கள் மொபைலின் கன்டென்ட்களை அழிக்கவும், அலாரம் அடிக்கவும் , லாக்கும் செய்யலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...